Friday, September 14, 2012

உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட் - 29

உருளைக்கிழங்குபசலைக்கீரைஓமம்



தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு = அரை கிலோ
பச்சை மிளகாய் = 6
பசலைக்கீரை = 1 கட்டு
ஓமம் = அரை ஸ்பூன்
தயிர் = 200 கிராம்
இஞ்சி = அரை அங்குலம்
தக்காளி = 2
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலை சீவிக் கொண்டு துருவிக் கொள்ளவும்.
பசலைக்கீரைகளை ஆய்ந்து நரம்பு நீக்கவும். இஞ்சியை தோலை நீக்கி விட்டு துருவவும். தக்காளியை நறுக்கவும்.
இவை எல்லாவற்றையும் உப்பு, ஓமம் சேர்த்து தண்ணீர் தெளித்து குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். இதை மேலும் சிறிது மசித்துக் கொண்டு தயிர் சேர்க்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட் தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

No comments:

Post a Comment