தேவையான பொருட்கள்:
பெரிய கேரட் – 1/4 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
பால்- 1/2 லிட்டர்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10 – 15
கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன்
ஏலப்பொடி – 1 பின்ச்
குங்குமப்பூ – சிறிது
செய்முறை:
கேரட்டை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும்.
வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் பழம், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இப்பொழுது சுவையான கேரட் அல்வா ரெடி.
மருத்துவக் குணங்கள்:
குடல்புண் (அல்சர்), வயிற்று வலி போன்றவர்களுக்கு கேரட் சாறு பயன்படுகிறது.
வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் குறையும்.
நார்ச் சத்து அதிகம் உள்ளதால், ஜீரண சக்தியை தூண்டி, உணவை செரிக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது கேரட்.
No comments:
Post a Comment