தேவையான பொருள்கள்:
சிறுகீரை = 1 கட்டு
சீரகம் = 1 ஸ்பூன்
வெங்காயம் = 1
தக்காளி = 2
இஞ்சி = சிறிது
அரிசி மாவு = 2 ஸ்பூன்
வெண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சிறுகீரைகளை வாங்கி கீரையை ஆய்ந்து எடுத்து விட்டு வெறும் காம்பு, வேர் பகுதியை மட்டும் நன்றாக அலம்பி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இதை சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது நறுக்காமலோ 6 கப் தண்ணீர் விடவும்.
தக்காளி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சீரகம் மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.
இதை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட பரிமாறலாம்.
சுவையான சிறுகீரை சூப் தயார். அருந்துவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
வெண்ணெய் சேர்க்க பிடிக்கா விட்டால் தவிர்த்து விடலாம்.
மருத்துவக் குணங்கள்:
சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது.
இதனால் மலச்சிக்கல் குறையும்.
கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும்.
மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.
No comments:
Post a Comment