Friday, September 14, 2012

நூல்கோல் வடை - 26

நூல்கோல்இஞ்சிபொட்டுக்கடலை மாவு



தேவையான பொருட்கள்:
நூல்கோல் – 2
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 3
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு - 10 பல்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
இதில் கொத்துமல்லித்தழையைப்பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

மருத்துவக் குணங்கள்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம். இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

No comments:

Post a Comment