மருத்துவக் குணங்கள்:
நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இது 3 – 5 அடி உயரங்கூட வளரும். இது முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங் மூலமும் செய்யப்படுகின்றது.
நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. இதை நிறதிற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.
நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.
இதன் பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும்.
செண்பகப்பூ 60, கார் எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக தூசி மண் முதலியவை இல்லாமல் இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி, மயில் துத்தமை கழஞ்சி 2, கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு தாய்பாலில் உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல், சதைவாங்கி முதலியன நீங்கும்.
No comments:
Post a Comment