Sunday, February 16, 2014

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்


சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்

சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை, தொகை சரக்கு முறை (திரிகடுகு, திரிபலா, திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.

No comments:

Post a Comment