கோரக்கர்
பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், நாத் என்னும் நவநாதர்களில் (one among 9 Naths) ஒருவராகவும் விளங்குபவர் இறக்கம் நிறைந்த கோரக்க சித்தர் . இவர் சித்தர்கள் வரிசையில் கோரக்கர் என்றும், நாத் முறையில் கோரக்நாத் என்றும் விளங்குபவர் .
நவநாதர்களில் முதன்மையாக விளங்கிய மசெந்த்ரியநாத் ஒரு பெண் மணிக்கு அளித்த சாம்பலிலிருந்து பிறந்தவர் கோரக்கன் என்று வழிவழியாக கிராம கதைகளும் உண்டு. பொதுவாக இந்த கதைகள் எல்லாம் சூட்சமான ஒரு பொருளை வைத்து இருக்கும், தெரிய வேண்டியவர்களுக்கு அதனை புலபடுத்தும்.
மசெந்த்ரியநாத் என்ற வடமொழி பெயர் பெற்ற மாமுனி அய்யனுக்கு, சித்தர்களில் மச்சமுனி என்ற பெயரும் உண்டு. கோரக்கர் மற்றைய சித்தர்கள் போல மருந்து, மந்தரம், ஞானம் பற்றி எழுதிய பாடல்கள் பல உள்ளன. அதில் சில சந்திரரேகை, ரவிமேகலை, முத்தாரம், மலைவாகடம் , நாமநீச திறவுகோல் ஆகும் .
சித்தர்கள் பல இடத்தில் நீண்ட தவம் புரிந்து சமாதி நிலை கொண்டு, மண்ணில் புதையுண்டு மறு படியும் வேறு இடத்தில் திரிவார்கள். கோரக்க முனிவரும் அது போல கோரக்பூர், நாகை, பேரூர், கோர குண்டம் என்று பல இடங்களில் சமாதி நிலை கொண்டு ஜீவ தளங்கள் அமைத்தவர். சந்திரரேகை என்ற கோரக்க முனி ஏழுதிய நூலில் இருந்து இரண்டு பாடல்கள் இதோ...
"புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னை
பூவுலகில் யாவர்களும் பொருந்தி மேவ
அகம்மகிழ போகநாதர் பழனி தன்னில்
அடங்கிடும்முன் பாகத்தன் வரலாறு முற்றும்
இகமரிய செனனசா கரமும் செப்பி
என்னைஅழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்
தகைமையுற சித்தரையான் அடக்கம் செய்து
தட்டாமல் உரகையுற்று பார்த்திடேனே
பாத்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
பக்குவமாய் போகரவர் தயங்கி டாமல்
சீர்நிறைஎன் போலவரை எய்து போட்டு
சிதறாமல் உரகையினில் என்னை கண்டார்
போர்விளங்க புதுமையுடன் எனை அழைத்து
பொய்கைநல் லூரஎன்றிட பூங்கா சென்றார்
நேர்மையுடன் என்அடக்கம் நிலைமை காட்டி
நெடியகடல் தாண்டிமறு தேசம் போனார் "
— பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், நாத் என்னும் நவநாதர்களில் (one among 9 Naths) ஒருவராகவும் விளங்குபவர் இறக்கம் நிறைந்த கோரக்க சித்தர் . இவர் சித்தர்கள் வரிசையில் கோரக்கர் என்றும், நாத் முறையில் கோரக்நாத் என்றும் விளங்குபவர் .
நவநாதர்களில் முதன்மையாக விளங்கிய மசெந்த்ரியநாத் ஒரு பெண் மணிக்கு அளித்த சாம்பலிலிருந்து பிறந்தவர் கோரக்கன் என்று வழிவழியாக கிராம கதைகளும் உண்டு. பொதுவாக இந்த கதைகள் எல்லாம் சூட்சமான ஒரு பொருளை வைத்து இருக்கும், தெரிய வேண்டியவர்களுக்கு அதனை புலபடுத்தும்.
மசெந்த்ரியநாத் என்ற வடமொழி பெயர் பெற்ற மாமுனி அய்யனுக்கு, சித்தர்களில் மச்சமுனி என்ற பெயரும் உண்டு. கோரக்கர் மற்றைய சித்தர்கள் போல மருந்து, மந்தரம், ஞானம் பற்றி எழுதிய பாடல்கள் பல உள்ளன. அதில் சில சந்திரரேகை, ரவிமேகலை, முத்தாரம், மலைவாகடம் , நாமநீச திறவுகோல் ஆகும் .
சித்தர்கள் பல இடத்தில் நீண்ட தவம் புரிந்து சமாதி நிலை கொண்டு, மண்ணில் புதையுண்டு மறு படியும் வேறு இடத்தில் திரிவார்கள். கோரக்க முனிவரும் அது போல கோரக்பூர், நாகை, பேரூர், கோர குண்டம் என்று பல இடங்களில் சமாதி நிலை கொண்டு ஜீவ தளங்கள் அமைத்தவர். சந்திரரேகை என்ற கோரக்க முனி ஏழுதிய நூலில் இருந்து இரண்டு பாடல்கள் இதோ...
"புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னை
பூவுலகில் யாவர்களும் பொருந்தி மேவ
அகம்மகிழ போகநாதர் பழனி தன்னில்
அடங்கிடும்முன் பாகத்தன் வரலாறு முற்றும்
இகமரிய செனனசா கரமும் செப்பி
என்னைஅழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்
தகைமையுற சித்தரையான் அடக்கம் செய்து
தட்டாமல் உரகையுற்று பார்த்திடேனே
பாத்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
பக்குவமாய் போகரவர் தயங்கி டாமல்
சீர்நிறைஎன் போலவரை எய்து போட்டு
சிதறாமல் உரகையினில் என்னை கண்டார்
போர்விளங்க புதுமையுடன் எனை அழைத்து
பொய்கைநல் லூரஎன்றிட பூங்கா சென்றார்
நேர்மையுடன் என்அடக்கம் நிலைமை காட்டி
நெடியகடல் தாண்டிமறு தேசம் போனார் "
No comments:
Post a Comment