Sunday, February 16, 2014

மலைபயணங்களில் தாகம் தணிக்கும் சதையன் கொடி


மலைபயணங்களில் தாகம் தணிக்கும் சதையன் கொடி
தண்ணீர் தரும் அரிய மூலிகை
மலைபயணங்களில் தாகம் தணிக்கும் சதையன் கொடி

களக்காடு முண்டந்துறை சரணாலயத்தின் பாம்பனாறு வனப்பகுதியில் மூலிகைகள் தேடி மேற்கொள்ளப்பட்ட ஒர் களப்பணியில் மிக்க தாகம் ஏற்பட்ட பொழுது எங்களுடன் உதவிக்கு வந்த பழஙகுடியான திரு பூதத்தான் ஒரு கொடியை வெட்டினார். அதிலிருநது சுமார் ஒரு குடம் அளவு தண்ணீர் கொட்டியது. குழுவினர் அத்தண்ணீரை பருகி தாகம் தணித்து கொண்டனர். எங்களுக்கு மிக்க ஆச்சரியம்.. அவரிடம் விசாரித்த போது பாரம்பரியமாக அவர்கள் மலைப்பயணங்களுக்கு செல்லும் போது தண்ணீரில்லாத பகுதிகளில் இக்கொடியே அவர்களின் தாகம் தணித்தது என்று கூறினார் . அக்கொடியின் பெயர் சதையன் ஆகும்.
 

No comments:

Post a Comment