Friday, September 14, 2012

காய்கறி சாலட் - 28

வெள்ளரிக்காய்வெங்காயம்காரட்



தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
காரட் – 1
புதினா இலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு (நீக்கியப் பகுதியை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கலாம்) மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி, அதன் மேல் காய்கறித்துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். (அலங்காரம் இல்லாமலும் இந்த சாலட் சாப்பிட சுவையாகவே இருக்கும்).

No comments:

Post a Comment