Thursday, July 11, 2013

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

 Used in the treatment of bee pollen is a good medicine throughout the world. Created by large bees bee pollen and pollen to grow food for young bees.
தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய  தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான  ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.  தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம்  போன்றவை  நிறைந்துள்ளது. 

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது. 

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில்  கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல்,  போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில்  பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு  உதவுகிறது. 

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான  ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது.  இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு  கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும்  பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது. 

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில்  தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து  ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது.  மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது..  

மலட்டுத்தன்மையை 

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும்  உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர்.  புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது  புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர்  கழிப்பை அதிகப்படுத்துகிறது. 


No comments:

Post a Comment