வேப்பமரம் நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மூலிகை செடியாக கருதபடுகின்றது. இந்த மூலிகை பல நோய்களுக்கு நிவாரணியாகவும் சுகாதார நலன்களை வழங்ககூடியதாகவும் உள்ளது.. கத்திரி வெயில் சுட்டெரிக்கிறதால வெப்பத்துல இருந்து தப்பிக்க குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது ரொம்ப அவசியம்.
தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு தாங்க. வேப்பம்பூவை பொடியாக்கி ரசம், பச்சடி வைத்து சாப்பிடலாம். கண் பிரச்சனைகளான மாலை கண் நோய், விழி வெப்பமண்டல அழற்சி போன்ற கண் பிரச்சனைகளை வேம்பு பயன்படுத்தி தடுக்கலாம். தோல் அழற்சி பிரச்சனைகளுக்கு வேம்பு இலைகளை அரைத்து சாறாக பிழிந்து அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் அலர்ஜி நீங்கிவிடும்.
உங்களுக்கு சருமநோய் தொற்று இருப்பின் வேப்பிலை குளியல் எடுத்து கொண்டால் சரும பிரச்சனைகளை தடுக்க முடியும். அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக புளிப்பு தன்மை, மேல் இரைப்பை வலி இருப்பின் அதை சரிசெய்ய வேம்பு பரிந்துரைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திகரிப்பு நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது..
வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்சனை, புண், ஈறுகளில் ரத்தம், போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள், மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளலாம். வேப்பம் பூ ரசம் எவ்வாறு செய்வது.
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப. பொடிப்பதற்கு: மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.
புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு (வெல்லம் கரைத்தது), பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதனால உங்க வீட்டுல வேப்பம்பூ ரசம், பச்சடி வச்சி அசத்துங்க.
No comments:
Post a Comment